அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் காற்று போனது?

கோத்தபாயவின் வினைத்திறனற்ற அமைச்சர்களிற்கு பதவி மாற்றம் நடைமுறையின் கீழ் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.இதனை அவரது அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சரத் வீரசேகர அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், காலை 11 மணிக்கு கங்காராம விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13வது திருத்த சட்டத்தை கடுமையாக விமர்சித்து வந்திருந்த சரத் வீரசேகர மாகாணசபைகள் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டமை கடுமையான வாதங்களை தோற்றுவித்திருந்தது.

ஏற்கனவே இலங்கை ஊடக இராஜங்க அமைச்சரான வியாழேந்திரனும் இவ்வாறு பதவி இறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.