இலங்கையில் மரணம் கட்டுக்கடங்கவில்லையா?

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

01) கொழும்பு- 02 பகுதியை சேர்ந்த 57 வயது நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்தார். இறப்புக்கான காரணம் கோவிச் 19 நோய்த்தொற்றுடன் நிமோனியாவும் மரணத்துக்கு காரணமாகியுள்ளது.

02) வெல்லம்பிட்டி பகுதியில் வசிக்கும் 65 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்தார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

03. தெமட்டகொ பகுதியில் வசிக்கும் 89 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்தார். மரணத்திற்கு முக்கிய காரணம் கொவிட் தொற்றுடன் நிமோனியாவும் ஏற்பட்டுள்ளது.

04. கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 48 வயது பெண். வீட்டில் இறந்தார் இறப்புக்கான காரணம் கொவிட் நோய்த்தொற்று. மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

05. கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 72 வயது ஆண். வீட்டில் இறந்தார். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் தொற்று தொற்றுநோயுடன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

06. கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் 69 வயது பெண். வீட்டில் இறந்தார். கொவிட் உடன் மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம்.

07. வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் 76 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் நோய்த்தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், முல்லேரியா வைத்தியசாலையில் மாற்றப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். கோவிச் 19 நிமோனியாவுடனான பாக்ரியா தொற்று மற்றும் தொற்று அதிர்ச்சி ஆகியவை மரணத்திற்கு காரணம்

08. வெல்லம்பிட்டி பகுதியில் வசிக்கும் 75 வயது பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் நோயை இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் இறந்தார். மரணத்திற்கான கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கடுமையான நிமோனியா ஆகும்.

09. 76 வயது பெண். கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இறந்துள்ளார். கொவிட் 19 உடன் நிமோனியா மற்றும் இரத்தம் விஷமடைந்தமை மரணத்திற்கு காரணம்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.