நான்கு பிள்ளைகளிற்கு நஞ்சூட்டி தற்கொலைக்கு முயற்சி?

தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தாமும் நஞ்சருந்திய சம்பவம் திருகோணமலை – உப்புவெளி, புளியங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 16 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தாய் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

8, 10, 12 வயதான மூன்று பெண் பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

குடும்பத்தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.