யாழ் மாநரகசபை அமர்வில் மணிவண்னன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியில் நீக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று யாழ் மாநகரசபை அமர்வின் பங்கேற்றுள்ளார்மணிவண்னன் யாழ்மாநகர எல்லைக்குள் வசிக்காதவர் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநகரசபையின் உறுப்பினராகச் செயற்பட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனால் அவர் கடந்த இரண்டு வருடஜங்களாக மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்றவில்லை.

அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்னன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வழக்கு மனுதாரரால் பின்வாங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்கப்பட்ட மணிவண்ணன் நீக்கப்பட்டார் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் யாழ்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகத்தினரிடம் மாநரகசபை உறுப்புரிமையை இரத்து செய்யக் கோரியது.

அதனைத்தொடர்ந்து தெரிவத்தாட்சி அலுவலகர் மணிவண்ணனின் உறுப்புரிமை நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

இத்த முடிவைத் தொடர்ந்து மணிவண்ணன் யாழ் நீதிமன்றில் தனக்கெதிரான முடிவை ஆட்சேபித்து சிறப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

எதிராளிகளாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், யாழ் தெரிவத்தாட்சி அலுவலகர், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிவண்ணனின் மனுவை விசாரித்த நீதியாளர் மனுதாரர் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க யாழ் மாநகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து மணிவண்ணன் இன்று மாநகரசபை அமர்வில் கலந்துகொண்டார்.

யாழ் நகர பஸ் நிலைய கடை தொகுதி பிரச்சினைக்கு சிறந்த தீர்வு முறை ஒன்றை அமர்வில் முன் வைத்தார் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்.

பல காலமாக இருந்து வருகிற யாழ் நகர பகுதியில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடை தொகுதி பிரச்சினையை தொடர்பில் மணிவண்ணன் கூறியதாவது. முதலில் அவர்களுக்கு எற்ற இன்னும் ஒரு இடத்தை தெரிவு செய்து அதன் பின்னர் நடவடிக்கை தொடரவேண்டும் அதே நேரத்தில் புதிய இடத்தை தெரிவு செய்வதற்கு யாழ் மாநகர சபையின் அங்கத்துவம் உள்ள கட்சிகளில் இருந்து ஒருவர் வீதம்R மற்றும் அதிகாரிகள் குறித்த கடை பிரதிநிதிகள் என ஒன்றினைந்து புதிய இடத்தை தெரிவு செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும். என்றும் கூறினார். இது தொடர்பில் அனேகமாக உறுப்பினர்கள் மணிவண்ணன் அவர்களின் கருத்தை jஎற்றுக்கொண்டனார். அதன்tb அடிப்படையிலேயே யாழ் மாநகர சபை உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணிகள் மணிவண்ணன்.

தமிழ்த தேசிய கூட்டமைப்பு சார்பில் திரு. நிபாகீர் ஜ.தே.க சார்பில் திரு குயிலன் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருமதி. விஜயகாந்த் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் திரு. சிறிகரன் தெரிவு செய்யப்பட்டனார் ஈ.பி.டி.பி பிறகு பெயர் தருவதாக கூறினார்.