September 9, 2024

பிரான்சில் நடைபெற்ற நாதன், கஜன் வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிசில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில்

வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று பிரான்சில் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணியளவில் அம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தன் பகுதியில் நிகழ்வுகள் நடைபெற்றிருந்த நிலையில், மாலை ஐந்து மணியளவில் ஈழமுரசு பத்திரிகையை வெளிக்கொண்டுவரும் ஊடகமையத்தில் இவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறிப்பிட்டளவானவர்களுடன் இடம்பெற்றது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் இம் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி, மலர் வணக்கம் செலுத்தியிருந்தனர்.