எகிறும் மரணம்: இன்று மூவர் பலி! அச்சத்தில் இலங்கை?

இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதுடைய கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த 19 வயதுடை நபர் வாழைத்தோட்டத்தைச் சேர்ந்தவரெனவும் 75 வயதான நபர் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் இன்று காலை 17 ஆவது உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. அதன்படி அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.