அறிவிப்பசிபோக்கும் பாரிஸ்அறிவாலயம் புத்-தகசாலை 28.10.20இன்று 20வதுஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

அறிவிப்பசிபோக்கும் பாரிஸ்அறிவாலயம் புத்-தகசாலை 28.10.20இன்று 20வதுஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.உரிமையாளர்மு.சிவதாஸ்
அவர்கள், வாடிக்கையாள வாசகர்கள், மாணவர்கள்,வர்த்தக
கலை இலக்கிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
பாரிஸில் தேடல் பிரியர்களின் தேவாலயமாக திகழும் அறிவாலயம் புத்தகசாலை அதன் சேவை தொடர அதிபர் சிவதாஸ் அவர்களை-யும் நிறுவனத்தையும் உங்களுடன் இணைந்து பாரிஸ் பாலம் படைப்பகமும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
பிரான்ஸில் வாழும் இலங்கை பட்டதாரியான சிவதாஸ் அவர்கள் 1981ல் புலம்பெயர்ந்தார்.பிரான்ஸில் கால்பதித்த ஆரம்ப காலங்களில் கடுமையான உழைப்புக்கு பின்னர் சிறிதாக வியாபாரத்தில் ஈடுபட விருப்பம் கொண்டு பிரான்ஸில் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்சப்பெல் பகுதியில் அறிவாலயம் புத்தகசாலையை 28.10.2000 ஆரம்பிக்கிறார்.
ஆனால் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் தமிழாலயம் என்ற பெயரில் முதல் தமிழ் புத்தகசாலை ஆரம்பித்தவர் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சி.பாலச்சந்திரன் அவர்கள் என்பது இத்தருணத்தில் பதிவிடப்படவேண்டியது.
ஆரம்பத்தில் புத்தகசாலையை தொடங்குவதில் இது வெற்றி பெறுமா என்ற கொஞ்சம் தயக்கம் இருந்ததாகவும் தொடங்கு அது வெற்றி பெறும் என்று நம்பிக்கையூட்டியவர் தனது நண்பர் அமரர் தோழர் புஷ்பராஜா அவர்கள் என்று கூறுகிறார் சிவதாஸ் அவர்கள்.
இதே போன்று தாயகத்தில் புத்தக விற்பனையில் சாதனை படைத்த பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் சிறிதர்சிங் அவர்களுடைய ஆலோசனைகளும் இந்த துறையில் சிறப்புற சிவதாஸ் அவர்களை வழிநடத்துகிறது.
முற்றுமுழுதாக வியாபாரம் என்றில்லாமல் நம்மவர்களின் அறிவை செழுமைபடுத்த(மேன்மை படுத்த) சமூக நல்நோக்கத்தோடு உருவாக்கப் பட்டது புத்தகசாலை என்பது சில விமர்சகர்களின் கருத்தாகவுள்ளது.
புகலிட வாழ்வின் நெரிசலுக்குள்ளும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்குள்ளும் நம்மவர்கள் வாசிப்பு பழக்கத்தை குறைக்குமெண்ட ஐயப்பாட்டை உடைத்திருக்கிறது அறிவாலயத்துக்கு வரும் வாசிப்பாளர்களின் வருகை !!!
ஐரோப்பிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாது கனடாவிலிருந்தும் பிரான்ஸ் லாச்சப்பெல் விசிற் பட்டியலில் பாரிஸ் அறிவாலயமும் முக்கிய இடம் பிடிக்கிறது.
சிவதாஸ் அவர்களின் புத்தகத்தேர்வுகள் படிப்பார்வத்தை தூண்டுகிறது.
தாயகம் மற்றும் தமிழகத்தில் நடக்கும் புத்தக கண்காட்சிகளுக்கு நேரடியாக சென்று இந்திய ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றும் பயனுள்ள மொழி பெயர்ப்பு புத்தகங்களையும் குவித்திருகிறார் அறிவாலயத்துக்குள்.பிறமொழி அகராதிகளும் இதற்குள் அடங்கும்.
புகலிடத்தில் பிறந்து நமது தமிழ் மொழியை கற்கும் இளைய தலைமுறையினர் தமிழ் புத்தகங்களின் வாசிப்பையும் பெருக்கவேண்டும்
அதற்கான ஆர்வத்தை அங்கு வந்து புத்தகம் வாங்கி போகின்ற இளையவர்களின் வருகையூடாக அவதானிக்க முடிகிறது.
28.10.2000 ஆரம்பிக்கப்பட்டு 28.10.2020 இன்று 20வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும்
பாரிஸ் அறிவாலயம் புத்தகசாலை அதன் உரிமையாளர் மு.சிவதாஸ் அவர்களுக்கும் சேவை தொடர பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.(K.P.L.)
நிழற்படத்தில் அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளர் மு.சிவதாஸ், மூத்த நாடகவியலாளர் ஜே.ஏ.சேகரன்,கே.பி.லோகதாஸ்
நிழற்படங்கள் நன்றி