September 9, 2024

மட்டக்களப்பில் விபத்து! இருவர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற உந்துருறுளி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்னால் மட்டக்களப்பு – கல்முனை பிராதான வீதியில் விபத்து இடம்பெற்றிருந்ததது.

கல்முனை நோக்கிப் பயணித்த உந்துருளியும், மட்டக்களப்பு நோக்கி சென்ற உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.