துயர் பகிர்தல் செல்லையா திருநாவுக்கரசு

யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட என் உடன் பிறவாத் தம்பி (திருநா) திரு. செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் (உரிமையாளர், „சோமசுந்தரம் பல்பொருள் வாணிபம், மாங்குளம்“) இன்று 26-10-2020 திங்கட்கிழமை மாங்குளத்தில் இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இத் தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகிறேன்,
மீளாத் துயரடைந்து இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த கவலைகளையும், அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !