„சொன்னது நீ தானா“ : இசை குயில் சுசீலா வாழ்த்தை பெற்ற சாம்பவி!

சமீபத்தில் கனடாவில் வசிக்கும் பாடகர் மின்னல் செந்தில்குமரன் அவர்கள் வெளியிட்ட சொன்னது நீ தானா என்ற பாடலை YouTube வலைத்தளத்திலும்

பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையின் வட கிழக்கில் நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிவாரண திட்டங்கள் என்று பல உதவிகளை அவருடைய நிவாரண அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக செய்து வருகின்றது.அவர் பல பெண்களின் கண்ணீர் கதைகளை கேட்ட அனுபவமே இந்த பாடலை  எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கணவனை இழந்த இளம் பெண்களுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை துணையை தேடி கொடுக்க எங்கள் சமூகம் மனமுவந்து ஆதரவு தர வேண்டும். இதனை விட பெண்கள் வேறு பிரெச்சனைகளுக்கு முகம் கொடுக்க தேவை வேண்டி வந்தால் மனம் உடைய கூடாது. மீண்டும் ஒரு புது தொடக்கம் சாத்தியமாகலாம் என்று அழகாக பாடலை முடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் கார்த்திக் ராமலிங்கத்தின் மெருகேற்றிய  இசை அமைப்பு, அபாரமான குரல் வளத்துடன் சாம்பவி, காதுக்கு விருந்து படைத்திடும் மற்ற இசை கலைஞர்கள், கண்களுக்கு விருந்து படைத்திடும் ஒளி அதனுடன் அரங்க அமைப்பு என்று இந்த கொரோனோவிற்கு மத்தியிலும் களை காட்டும் „சொன்னது நீ தானே“ . நிச்சயம் நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டிய மிக நேர்த்தியான படைப்பு.

இந்த பாடலின் காணொளியினை பார்த்த சுசீலா அம்மா மகிழ்ந்துபோய், பாடகி சாம்பவி ஷண்முகானந்தம் அவர்களை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்த கார்த்திக் ராமலிங்கம் மற்றும் இந்த பாடலை தயாரித்த செந்தில்குமரன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். நீங்கள் இந்த பாடலை இன்னும் பார்க்கவில்லையென்றால் இதோ