September 9, 2024

பேலியகொட சென்ற முல்லை,யாழ் மீன் வியாபாரிகள்?

பேலியகொட மீன் சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக சென்று திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசு அக்கறை செலுத்தி வருகின்ற போதும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவு பகுதிகளிலிருந்து அங்கு சென்று திரும்பியோர் பற்றி அக்கறையற்ற நிலை காணப்படுகின்றது.

அதேபோல குறித்த பகுதிகளில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்களும் அங்கு சென்று திரும்பும் ஏனைய மீனவர்கள் தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகளை கைக்கொள்ளவில்லை என்றும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தீவிரம் பெற்றுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலமே கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என கூறப்பட்டுவருகின்றது.

பேலிய கொட சந்தை என்பது இலங்கையின் அனைத்துக் கரையோரப் பகுதிகளையும் சேர்ந்த மீனவர்களின் மொத்த மீன் விற்பனைசெய்யப்படும் பிரதான மையங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து நாள்தோறும் மீன்கள் லொறிகளில் எடுத்து செல்லப்படுவது வழமையாகும்.