Oktober 7, 2024

சென்னையில்1985ல்விடுதலைபுலி இயக்கபாலசிங்கம்வீட்டில்குண்டு வெடிப்பு_சம்பவம்… உயர்நீதிமன்றதீர்ப்பு

சென்னையில் 1985ல் விடுதலை புலி இயக்கபாலசிங்கம் வீட்டில் குண்டு வெடிப்பு சம்மந்தமாக உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வந்துள்ளது. பாலசிங்கம் லண்டனில் இருந்து தமிழகம் வந்தபொழுது 1985ல் உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நாங்கள் பதிவு செய்திருந்த அறையில் தங்கி இருந்தார். பேபி சுப்பிரமணியனும், நானும் விமான நிலையத்தில் இருந்து பால சிங்கத்தை அழைத்து வந்து உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் தங்க வைத்தோம்.

அவருக்கு ஒரு வீடு வாடகைக்கு பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இன்றைக்கு பெசன்ட் நகரில் உள்ள முருகன் இட்லி கடைக்கு அருகே 135 E எலியாட் பீச் சாலையில் பால சிங்கத்தை தங்கவைக்க வாடகைக்கு வீடு எடுக்க
ப்பட்டது.

கடந்த23 -12-1985 அன்று பால சிங்கம் தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டு வெடித்தது . அந்த வெடிகுண்டு வெடித்த வழக்கை சாஸ்திரி நகர்,காவல் நிலையத்தில் Cr No 1427/1985 என்று நம்பர் பதிவானது .

அந்தசமயத்தில் நெடுமாறன் இயக்க
த்தில் பொது செயலாளர் பொறுப்பில் நான் இருந்தேன். நெடுமாறனும், நானும் செய்தி கேள்விபட்டவுடன் விரைந்து அங்கு சென்றோம். இது. குறித்து அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் கவனத்துக்கு நெடுமாறன் கொண்டு சென்றார். பின் இந்த வெடிகுண்டு வழக்கை மத்திய கிரைம் பிரிவு சி.ஐ.டி (மெட்ரோ ) விசாரித்தது.

இந்த வழக்கில் மானவைதம்பி பெயரும்
சேர்க்கப்பட்திருந்தது. மானவை தம்பி இலங்கையை சேர்ந்தவர். இலங்கையில் திமுக கிளையில் நிர்வாகியாக இருந்து நடத்தியவர். சென்னையில் நீண்ட நாள் வசித்தார். எப்போதும் புல் கேண்ட் வெள்ளை சட்டையும்,வேஷ்டியும் அணிவார. ஈழ தமிழர் பிரச்சினை என்றால் முன்னாடி நிற்பார் . இப்படியான பல நினைவுகள் மனதில் நிழலாடுகிறது. பால சிங்கம் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

இந்த குண்டுவெடிப்பில் எவரும் காயமடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ரஞ்சன், மணைவைதம்பி ஆகியோர் இறந்து விட்டனர். ராதாகிருஷ்ணன் அப்ரூவராக மாறிவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தீர்ப்பில் கீழே கூறப்பட்டதில் ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும் . J.N. Dixitயா? .T.Dixitயா?

High Court Order-certain portion:
Para-6
‘’during the course of investigation, the police has seized several incriminating documents including the following note:
Mr.T.Dixit in Colombo is in touch with Srimavo and Anura also with Mr.T.As Mrs. Srimavo recntly gave speeches against Mr T.Dixit is trying to patch up and to bring some understanding with SLEP. India wants some tension in the south through Mrs.Srimavo. At the same time they advice her to have good relationship with Mr.T. I spoke to T. as it isT. will not join or come to some understanding with Mrs.Srimavo. He will only support the President and work with him. India forcing the President to settle this problem not to help Tamils, to make President unpopular and make divisions in the U.N.P. also to allow Srimavo to gain power. U.S.S.R. is very keen to change the Government of Sri Lanka as soon as possible. India is instrument for the purpose…RAW has asked LTTE to do activities on Sinhala Civilians in the border District.’’

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2020.
#KSRPostings