சனி,ஞாயிறு ஊரடங்கு:முடிவில்லையென்கிறார் தளபதி?

இன்று கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே இன்று அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் வார இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவது குறித்து தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார பிரிவுகளின் உத்தரவுகள் குறித்து தெளிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,

அதன்பின் ஊரடங்கு உத்தரவு விதிப்பதா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல்களை அறிவிப்பதா என்ற முடிவுகள் எட்டப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

நேற்றிரவு நிலவரப்படி வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்