அரவிந்தகுமார் வெளியே: உறுதியானது?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு, அரவிந்த் குமார் எம்பியை, கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்த எனது முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியது.

அவரது கூட்டணி அங்கத்துவத்தை முழுமையாக நீக்கும் முடிவை அரசியல் குழுவும், சட்ட நடவடிக்கையை கூட்டணி பங்காளி கட்சி மலையக மக்கள் முன்னணியும் எடுக்கும். இதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் பங்காளி கட்சிகள் வழங்கும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்..

இன்றைய கூட்டத்தில், கூட்டணியின் பிரதி தலைவர்கள் எம்பிக்கள் திகாம்பரம், ராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் மற்றும் பொதுசெயலாளர் சத்திரா சாப்டர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.