கைதான அதிகாரி ஈபிடிபியா?

கிளிநொச்சியில் பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக கைதான அதிகாரி ஈபிடிபி ஆதரவாளர் என்ற பேரில் விசாரணைகளிற்கு அல்வா கொடுத்து வந்தமை அம்பலமாகியுள்ளது.

கிளிநொச்சியில் செயற்பட்டுவரும் கல்வி அமைச்சின் கீழான மும்மொழி கற்கைகள் பிரிவை சேர்ந்த அதிகாரியொருவரே தற்போது கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக குறித்த கல்வி அதிகாரியின் பாலியல் இம்சைகள் தொடர்பில் வடமாகாண கல்வி அதிகாரிகளிற்கு முறையிடப்பட்ட போதும் அமைச்சர் டக்ளஸின் ஆதரவாளரென தெரிவிக்கப்பட்டதையடுத்து எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

கல்வி அமைச்சின் செயலாளரால் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்ட போதும் அக்குழுவில் உள்ள பெண் அதிகாரிகள் அச்சங்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

இந்நிலையிலேயே அவர் காவல்துறைக்கு முறையிட முற்பட்ட போது அதுவும் சாத்தியப்படாத நிலையில் கொழும்பிற்கு முறையிட்டதையடுத்து அதிகாரி கைதாகியுள்ளார்.