போரின் எஞ்சிய வடுவான பழைய பூங்கா கச்சேரி கட்டடம் …

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் அமைந்துள்ளது.போரியல் வடுக்களை தாங்கி இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பிரித்தானிய அரசின் அரசாங்க அதிபராகப் பதவி வகித்த ‚பேர்சிவல் அக்லன்ட் டைக்‘ இந்தப் பூங்கா அமைந்திருக்கும் 27 ஏக்கர் நிலப்பரப்பினை அரசாங்க அதிபரின் இருப்பிடமாகப் பயன்படுத்தும் நோக்கில்ல் தன் சொந்தப் பணத்தைச் செலவுசெய்து வாங்கினார். இந்த நிலத்தை வாங்கிய அவர் அதன் ஒரு பகுதியில் தனக்கான ஒரு மாளிகையையும், மிகுதிப் பகுதியில் ஒரு பெரிய பூங்காவையும் உருவாக்கினார்.
இதுவே இன்று பழைய பூங்கா என அழைக்கப்படுகிறது.1990களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பல சேதங்களுக்குள்ளாகி இன்று ஓர் காட்சிப் பொருளாக எமக்கு காட்சியளிக்கின்றது.