ஹமாஸ் ஆதரவு அமைப்பு கலைக்கப்படுகிறது – இம்மானுவல் மக்ரோன்

பிரான்சில் சாமுவேல் பாட்டி தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அக்கொலையுடன் பின்னணியில் உள்ள ஹமாஸ் சார்பு அமைப்பான சேக் யாசின் Cheikh Yassine  கலைக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.நேற்று செய்வாய்கிழமை இந்த அறிவித்தலை அவர் விடுத்திருந்தார். இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்பை கலைப்பதற்கான முடிவை இன்று புதன்கிழமை அமைச்சரவையில் எடுக்கப்படும் என்றார்.

குறித்த ஆசிரியரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு காவல்துறையின் காவலில் இருக்கும் தீவிர இஸ்லாமிய ஆர்வலர் அப்தெல்ஹாகிம் செஃப்ரியோய் என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.