மதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெறும் மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சோழவந்தான் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அந்த சமுதாய மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், மைக் செட்,

கொட்டகை, பால்குடம், முளைப்பாரி உள்ளிட்ட வெளிப்படையான மக்கள் கூடும் விஷயங்களுக்கு அனுமதி இல்லை என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து தனித்தனியாக விழாக்களை நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், குருபூஜையில் கலந்துகொள்ள செல்பவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று செல்லவும், வாகனத்தில் 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.