Oktober 15, 2024

மருதங்கேணி வைத்தியசாலையில் 21பேர்?


வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்கள் 21 பேர் கடந்த இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்கள் வடக்கை சேர்ந்தவர்களா அல்லது தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாவென்ற தகவல் வெளியாகியிருக்கவில்லை.

ஏற்கனவே கிளிநொச்சியில் 400 கட்டில்களுடன் வைத்தியசாலை கடந்த வெள்ளி திறக்கப்பட்டுள்ள போதும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.