Mai 11, 2024

மாடல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட விக்ரகா 45007 ரோந்து கப்பல் கடலோர காவல் படைக்கு இன்று ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் துறைமுகம் இயங்கி வருகிறது. அங்கு கடலோர காவல் படைக்கு அளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐசிஜிஎஸ் விக்ரகா 45007 பாதுகாப்பு கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று நடைபெற்றது. அதில், நிதி அமைச்சக செயலாளர் சோமநாதன், கடலோர காவல் படை அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில், நம் நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக மூவர்ண பலூன் பறக்கவிட்டு கப்பல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாடல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விக்ரகா கப்பல் 25 ஆண்டுகள் திறம்பட செயல்படுமாம். அதுமட்டுமில்லாமல், நான்கு அதிநவீன துப்பாக்கி சுடும் வசதிகளும், ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதியும் பொருத்தப்பட்டுள்ளதாம்.

சுமார் 98மீ நீளம், 14.8மீ அகலத்தில் 2, 100 டன் எடையுடன் வடிவைக்கப்பட்டிருக்கும் இந்த கப்பல் 5000 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்றும் இதில் மாலுமிகள் உட்பட 102 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர் என்றும் இதன் மூலம் காவல் படை பலம் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.