April 28, 2024

இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற பருத்தித்துறை சற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த விளையாட்டு விழா!

பருத்தித்துறைசற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு சற்கோட்டை பங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்திரு A. பிரான்சில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மறைமாவட்ட இளையோர் இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு F.A. பெனட் அவர்களும் கௌரவ விருந்தினராக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியப் பொறுப்பாளர் அருட்திரு A. அன்ரோ வடனிசியஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்நிகழ்வில் மரதன் ஓட்டம், படகோட்டம், கிறிஸ் மரம் ஏறுதல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் போன்ற பல விளையாட்டு நிகழ்வுகளும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்குபெற்றும் விதத்தில் சற்கோட்டை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.