April 27, 2024

ஜேர்மனி பூப்பந்தாட்ட தரவரிசையில் முன்னிலை வகிக்கும் தமிழ் சிறார்கள்

அனிகா ஆனந்

இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார்.

ஹர்சத்குமார் கர்த்திக்

இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மன் தழுவிய போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஜெர்மன் ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று தகுதி நிலையை அடைந்ததுள்ளார்.

இறுதிப் போட்டிகளின் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை இறுதிச்சுற்று வரை அனிகா வெளிப்படுத்தினார்.

தமிழி மிகவும் சிறப்பாக விளையாடி கால் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் ஜெர்மன் தழுவிய தரவரிசையில் 5 ஆம் நிலையை எட்டியிருந்தார்.

இதில் அதிநுட்பமாகவும் தனது திறமையையும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் பாராட்டையும் பெற்ற ஹர்சத்குமார் முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் அனிகா கால் இறுதி வரை முன்னேறி வெளியேறினார்.

ஹர்சவத் குமார் அரையிறுதி

வரை முன்னேறி மிகக் கடுமையான போட்டியின் மத்தியில் மூன்றாம் இடத்தைத் தனது ஆக்கினார்.

தமிழி மிகவும் திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார்.

இந்த ஆண்டின் பூப்பந்தாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஜெர்மன் ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர்.

ஜெர்மன் தரவரிசையில் ஹர்சத் குமார் 2ம் இடத்தையும், தமிழி 3ம் இடத்தையும்.அனிக்கா 17ம் இடத்தையும் எட்டியுள்ளனர்.

இவர்களினது கடினமான பயிற்சியும் பெற்றோர்களின் விடாமுயற்சியும் தமிழர்களாகிய எம்மை இன்று பெருமை கொள்ள வைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன் னுதாரணமாக இருக்கட்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert