April 26, 2024

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் மன்னிப்பு கோரிய சுமந்திரன் – சிறிதரன்

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் மன்னிப்பு கோரிய சுமந்திரன் - சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமானது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக விவாதிக்கப்பட்டது.

கட்சித் தலைமைக்கு எதிராக இடம் பெற்ற சதி நடவடிக்கைகள் தொடர்பிலும் விவாதிக்கப் பட்டது

அப்போது விவாதிக்கப் பட்டவை வருமாறு….

சுமந்திரன், சிறிதரன் பேசும்போது- கட்சி தலைமையை கைப்பற்றுவது தொடர்பாக வெளியான செய்தி விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார். இந்த விவகாரத்தில் மாவை சேனாதிராசா மனம் பாதிக்கப்பட்டிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தனர்.

கட்சி செயலாளரின் சதி நடவடிக்கையை விலாவாரியாக விபரித்து, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி வாசித்ததும், எம்.எ.சுமந்திரன் குறுக்கிட்டு, கட்சி யாப்பின்படி செயலாளரை மாற்றுவது பொதுச்சபையில், இங்கு மாற்றினால் நீதிமன்றம் செல்லலாம் என்றார்.

நீதிமன்றம் செல்லலாம் என அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். நம்பிக்கையில்லா பிரேரணை, கூட்ட அட்டணையில் இல்லையென்றும் கூறினார்.

இருதரப்பிற்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இதன்போது, மாவை சேனாதிராசா, சுமந்திரனை பார்த்து நீங்கள் சொல்லும் அந்த யாப்பில் கட்சி தலைவருக்கு தெரியாமல் – சொல்லாமல் – செயலாளர் ஒரு நியமனத்தை வழங்கலாம் என சொல்லப்பட்டுள்ளதா என கேட்டு சுமந்திரனை அடக்கினார்.

தேசியப்பட்டில் சதியை பின்னணியில் நின்று இயக்கியவர் சுமந்திரன், சதி செய்யும்போது யாப்பு நினைவிற்கு வரவில்லையா என்பதை ஞாபகப் படுத்தவே மாவை இந்தக் கேள்வியைக் கேட்டார்.

சுமந்திரன் கதைப்பதை நிறுத்தி மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

அப்போது, கிழக்கு முன்னாள் எம்.பி சீ.யோகேஸ்வரன் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்டினார். தமிழ் அரசு கட்சியின் யாப்பின்படி 4 வருட அங்கத்தவரே தேர்தலில் போட்டியிடலாம்.

ஆனால், சிங்கள பின்னணியுடைய சாணக்கிய ராகுல வீரபுத்திரன் அந்த விதிகளை கணக்கிலெடுக்கப்படாமல் நியமனம் வழங்கப்பட்டவர்.

கூட்டமைப்பின் மும்மூர்த்திகளிற்கு புரியாணி வாங்கிக் கொடுத்து நியமனத்தை பெற்றார் என அப்பொழுதே அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாக பேசப்படுவதுண்டு.

சாணக்கியனிற்கு நியமனம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அப்போது சுமந்திரன் யாப்பை படிக்கவில்லையா என கேட்டார்.

சாணக்கியனிற்கு நியமனம் வழங்கியதிலும் சுமந்திரனே முன்னணியில் இருந்தார். யோகேஸ்வரனின் கேள்விக்கும், சுமந்திரன் மௌனம்

தொடரந்து சுமந்திரன் பேசிய போது, தனக்கும் சிறிதரனிற்கும் எதிராக சதிகள் நடந்தது. எம்மை தோற்டிக்க பலர் முயன்றனர். எம்மை தோற்டிக்க முனைந்தவர்கள் தோற்றனர். நாம் வென்றோம் என்றார்.

பேச்சை ஆரம்பித்தபோது, எனது பெயரை தலைவர் மாவை சேனாதிராசா 32 தடவைகள் உச்சரித்தார், அதனால் பதிலளிக்கிறேன் என்றார்.

சிறிதரன் பேசும்போதும் இதையே பேசினார். தனது பெயரை மாவை 20 தடவைகள் உச்சரித்தார் என்றார். இதன்போது, கூட்டத்திலிருந்தவர்கள் 20 தடவைகள் உச்சரிக்கவில்லையே, இதுவும் 75 கள்ளவாக்கு மாதிரியான கதையா என கூச்சலிட்டனர்.

உடனே சிறிதரன், 20 தடவை இல்லாவிட்டாலும் பலமுறை உச்சரித்தார் என்றார்.

சிறிதரன் சில சமயங்களில் தொடர்பில்லாமல் பேசுபவர் என பலரும் கூறுவர் நேற்றும் அப்படித்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு, புளொட்டை இணைத்ததுதான் காரணம் என்றார்.

தடுமாறிய சம்பந்தன்

மன்னார் எம்.பி, சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசியபோது, கூட்டமைப்பின் அத்தனை சரிவிற்கும் இரா.சம்பந்தனே காரணமென முகத்திலறைந்தாற்போல சொன்னார். குறிப்பாக, தேசியப்பட்டியல் விவகாரத்தில் சதி நடந்துள்ளது. அதற்கு துணை போயுள்ளீர்கள்.

மாவை சேனாதிராசாவுடன் நீங்கள் தொலைபேசியில் பேசியபோது, நான் மாவை சேனாதிராசாவின் வீட்டில்- அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.

நீங்கள் கேட்டு, தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்க தயாராக இருப்பதாக அவர் உங்களிடம் சொன்னதை நான் எனது இரண்டு காதுகளாலும் தெளிவாக கேட்டேன் என திரும்பத்திரும்ப அழுத்தி சொன்னார்.

நிலைமை அப்படியிருக்க, மாவை தேசியப்பட்டியல் நியமனத்தை ஏற்க தயாராக இருந்தது தெரியாதென இப்பொழுது பொய் சொல்கிறீர்கள் என்றார்.