September 7, 2024

வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து கனடாவிலிருந்து வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளன.

இன்னமும் கொரோனா பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதால் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, செப்டம்பர் 30ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

மாதந்தோறும், தன் நாட்டின் கொரோனா பரவல் சூழலை ஆராய்ந்து கனடா பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பாக முடிவெடுத்து வருகிறது.

மேலும், மார்ச் முதல் அமுலில் இருக்கும் கட்டாய தனிமைப்படுத்தலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளோரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.