September 9, 2024

யாழ் வணிகர் கழகத்தினரால் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்திற்கு 3 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது!

யாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது.

அதன் ஒரு அங்கமாக யாழ் வணிகர் கழக நிர்வாகசபை உறுப்பினர் அன்பளிப்பாக வழங்கிய 2சக்கரநாற்காலிகளும் யாழ் வணிகர் கழகத்தால் ஒரு சக்கரநாற்காலியுமாக மூன்று சக்கர நாற்காலிகள் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சக்கரநாற்காலிகள் யாழ் வணிகர் கழக அலுகத்தில் வைத்து வணிகர் கழக தலைவர் ,உபதலைவரினால் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.