April 26, 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழி!

கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு நேற்று மாலை பயணம் மேற்கொண்ட அவர் தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்தரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நடைபெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுகூடி ஆராய்ந்து தலைவர், கொறடா, ஊடக பேச்சாளர் போன்ற பதவி நிலைகளை தெரிவு செய்வது வழமை 2010ஆம் ஆண்டு ஊடக பேச்சாளராக சுரோஸ் பிரேமச்சந்திரனும், 2015 சுமந்திரனும் தெரிவு செய்யப்பட்டார்கள். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பிற்பாடு நாடாளுமன்ற குழு இந்த தெரிவினை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற குழு கூட்டப்படாத பட்சத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு நேற்று சம்பந்தன் தலைமையில் கூடி கொள்கையளவில் பிரதம கொறடாவாக சித்தார்த்தன் பெயரும், ஊடகப்பேச்சாளர் ஆக அடைக்கலநாதன் பெயரினையும் சம்மந்தன் முன்மொழிந்துள்ளார்.

இது எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற குழுகூடி அனுமதியினை பெற்றும் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பதவி நிலையில் தொடர்ந்து அங்கம் வகிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பேச்சு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்

இந்திய தூதவருடன் பேச்சு வழமையானது இந்திய தூதவரின் அழைப்பினை ஏற்று எங்கள் தலைவர்கள் சந்தித்துள்ளார்கள். புதிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பிற்பாடு ஒரு சம்பிரதாயபூர்வ சந்திப்பாக இருந்தாலும் பல்வேறு விடையங்கள் சம்மந்தமாக பேசப்பட்டதாக அறிகின்றேன்.

எதிர்காலத்தில் தமிழ மக்களின் பிரச்சனைகள் சம்மந்தமாக அரசாங்கத்தடன் அல்லது அரச தரப்புடன் உறவினை பேணி எதிர்கால நடவடிக்கை முன்னெடுப்பது சம்மந்தமாக இருதரப்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.