September 10, 2024

ரணில் இல்லாத ஜதேக-சஜித் கூட்டு

ரணில் அற்ற ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் ஐக்கியதேசிய கட்சியின் புதிய இளம் தலைவர் உருவாகுவார் எனவும் தெரிவித்துள்ள அவர் அதுவரை ஐக்கியதேசிய கட்சியை மீளகட்டியெழுப்புவது குறித்து பொறுமையுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க தனது தலைiமை பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயக்கம் கொண்டிருக்கவில்லை அவர் தான் இளம் தலைவரிடம் தலைமைப்பொறுப்பை விட்டுக்கொடுப்பதற்கு தயார் என ஏற்கனவே தெரிவித்துள்ளார் எனவும் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜக்கிய தேசியக்கட்சியை தனது மருமகனான ருவான் விஜயவர்த்தன கையில் கையளிக்க ஏதுவாக தேசியப்பட்டியல் ஆசனத்தை அவருக்கு வழங்க ரணில் முற்பட்டுள்ளார்.

இதனிடையே மாகாணசபை தேர்தலில் ரணில் தலைமையில் போட்டியிட பெரும்பலானா ஜக்கிய தேசியக்கட்சி தலைவர்கள் விரும்பவில்லையென கூறப்படுகின்றது.