September 11, 2024

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு ஐ.தே.கவுக்கு அழைப்பு…. முக்கிய செய்தி…

ஐக்கிய தேசிய கட்சியை கைவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதே ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு இருக்கும் மாற்று வழியாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷ விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் இதனை நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தனர்.

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் ஐக்கிய தேசியக்கட்சி எதனை மேற்கொள்ளவேண்டும் என்று என்பதை உணர்த்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே பல தடவைகள் ஐக்கிய தேசியக்கட்சியை புனரமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டமையையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே ஐக்கிய தேசியக்கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியினருடன் இணைய வேண்டும் என்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷ விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.