பிரான்சிலிருந்து அவசரமாக நாடு திரும்பிய பிரித்தானிய மக்கள்!
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, பிரான்ஸில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரான்ஸுக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற பிரித்தானிய மக்கள் பல்லாயிரக் கணக்கோர் அவசரம் அவசரமாகத் நாடு திரும்பியுள்ளனர்.24 மணி நேரத்துக்குள் நாடு திரும்பவில்லை என்றால், 14 நாள்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என பிரித்தாய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 4 மணிக்கு அந்தப் புதிய கட்டுப்பாடு நடப்புக்கு வந்தது. இதனால் பிரித்தானிய பயணிகள் சுமார் அரை மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர்.
தலைநகர் பாரிஸையும், துறைமுக நகரமான மார்ஸெல்லையும் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து அதிகமுள்ள பகுதிகளாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மூன்றாவது நாளாக அங்கு, 2,500க்கும் மேற்பட்ட புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.
நெதர்லந்து, மொனாக்கோ, மால்ட்டா, டர்க்ஸ் – கேகோஸ் தீவுகள், அருபா ஆகிய இடங்களிலிருந்து பிரிட்டன் திரும்புவோரும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.
பிரிட்டனின் புதிய நிபந்தனைக்கு பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.