September 16, 2024

வியாழேந்திரன் காட்டில் மழை?

கூட்டமைப்பிலிருந்து பாய்ந்து வெற்றியீட்டிய வியாழேந்திரன் குடும்ப சகிதம் தனது இராஜங்க அமைச்சு பதவியை இன்று பொறுப்பெற்றுள்ளார்.

தனது குடும்ப சகிதம் இன்று தபால் திணைக்களத்தில் தனது பொறுப்பை வியாழேந்திரன் ஏற்றுள்ளார்.

புளொட் அமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த வியாழேந்திரன் பின்னர் மகிந்த பக்கம் பாய்ந்தமைக்கான நன்றிக்கடனாக இராஜங்க அமைச்சினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.