März 31, 2023

முன்னணியின் பதவியேற்பும் முள்ளிவாய்க்காலில்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது நாடாளுமன்ற பதவியேற்பினை இனஅழிப்பின் கடைசி தளமான முள்ளிவாய்க்காலில் தனது பதவி பிரமாணத்தை பங்கேற்றிருந்தார்.பங்காளிகட்சிகளது தலைவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளை மறுதினம் சனிக்கிழமை (15) மு.ப 9 மணிக்கு இடம்பெறும் என முன்னணி அறிவித்துள்ளது.