September 9, 2024

நினைவேந்தலுக்குத் தடை! கைது செய்வோம் என எச்சரிக்கை!

செஞ்சோலைப் படுகொலை நிகழ்வுகள் நடத்துவதற்கு சிறீலங்கா காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதை மீறி நினைவேந்தல் செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.2006 ஆகஸ்ட் 14 அன்று சிங்கள விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

வருடம் வருடம் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வு நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏற்பாட்டாளர்களை புதுக்குடியிருப்பு காவல்துறை நிலையத்திற்கு நினைவுகூர தடை விதித்துள்ளனர். மீறி நினைவு கோருவோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர்.