Oktober 7, 2024

சோர்ந்து போன மனோகணேசன்?

கூட்டமைப்பினை தாண்டி தேசியப்பட்டியலில் மக்கள் ஜக்கிய சக்தியும் முட்டி மோதி வருகின்றது.இதனால் தான் சோர்ந்து போயிருப்பதாக மனோகணேசன்

தெரிவித்திருக்கின்றார்.

ஒரு கட்சி அமைத்து, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, உயிர் அபாயங்களுக்கு முகங்கொடுத்து, சக தலைமை நண்பர்களுடன் இணைந்து, எமது அந்த அரசியல் இயந்திரத்தை, பல மாவட்டங்களுக்கு கூட்டணியாக வியாபித்து, தேசிய கூட்டணியின் பெரும்பான்மை தலைவர்களுடன் நட்புடன் வாதாடி, நியமனங்களை பெற்று, சொந்த சொத்துகளை விற்று, பல கோடி ரூபா தேர்தல் நிதியை கொட்டி, பற்பல ஆண்டுகளாக தேர்தல் பிரசாரங்களை தொடர்ச்சியாக செய்து, மக்களை வீடு வீடாக போய் சந்தித்து, வாக்காளர்களாக இருந்தும், தேர்தல்களில் எதிர்பார்த்த அளவு வாக்கை அளிக்காமல் சும்மாவே வீட்டில் „தல, தளபதி, நயன்தாரா“ படம் பார்த்துக்கொண்டு இருந்த வாக்காள மக்களால் மனம் நொந்து, தேர்தலுக்கு பிறகு, தேசிய பட்டியல் தொடர்பில், அதே தேசிய கூட்டணி பெரும்பான்மை தலைமையுடன் முரண்பட்டு, வாதாடி கொண்டிருக்கிறேன். கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, ஒரு சமூக ஊடக பதிவுகூட போடாத, எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, அதையும் மீறி சென்று, எமக்கு எதிராக பொய் பதிவுகளை எழுதி, பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, பாமரரில் இருந்து சுயாதீன மீடியாகாரர்கள் வரை, பலர் இன்று வலிக்காமல், “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் கூக்குரலிடுவதை பார்க்கும் போது, நமது மக்களில் இத்தனை நிறங்களா? என்றும், எமக்கு வேண்டிய வேளைகளில் இந்த “போராளிகள்” எங்கே போனார்கள்? என்று உரக்க கத்தி கேட்க தோன்றுகிறது.