Oktober 8, 2024

கூடுகிறது தமிழரசு மத்திய குழு?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலை தன்னிச்சையாக அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியமை கடும் குழு மோதல்களை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் மிக விரைவில் கூடவுள்ளது. கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாவை சேனாதிராசா,மத்தியகுழுவை கூட்டும் உத்தரவை பிறப்பபித்துள்ளார்;.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவியை மாவை சேனாதிராசாவிடமிருந்து பறித்து, சி.சிறிதரனிடம் வழங்கும் இரகசிய முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்;கப்பட்டுள்ளது.

தோல்வி அடைந்த மாவை சேனாதிராசாவை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைக்க பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழரசுக்கட்சி யாழ்.கிளை என்பவை முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் சதி திட்டம் தீட்டப்பட்டு இரா.சம்பந்தன்,எம்.ஏ.சுமந்திரன் தரப்பு , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம், அம்பாறையின் த.கலையரசனிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் விரிசல் உச்சமடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாவை சேனாதிராசா,கோரியுள்ளார்.