September 11, 2024

“யாழில் அங்கஜனின் வெற்றி சுதந்திரக்கட்சியின் வரலாற்று வெற்றி” : முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து!

 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியினைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து  வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் கைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு  யாழ் மாவட்ட மக்கள் மிகச் சிறந்த வரலாற்று வெற்றியினைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

குறித்த வெற்றியினைப் பெற்றுக் கொடுத்த யாழ் மாவட்ட மக்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினது சார்பில் தனது நன்றிகளையும் கௌரவத்தினையும் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.