September 13, 2024

முன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்?

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார்.

அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்கும் மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த கட்சித் தலைமைகளுக்கு நன்றிகளை பல தரப்புக்களும் தெரிவித்துவருகின்றன.

கல்முனை மக்களின் மனங்களை வெல்வதற்கான ஆக்கபூர்வமான செயல்திறன் மிக்க சேவையினை வழங்குமாறு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அம்பாறைக்கு தனது போனஸ் ஆசனத்தை வழங்க வேண்டுமென பல தரப்புக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்க கோரியபோதும் அதனை புறந்தள்ளி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை கட்சியின் பல தரப்புக்களிடையேயும் கடும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.