September 9, 2024

ஜீவன் தொண்டமானுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்க அதிக வாய்ப்பு!!

ஜீவன் தொண்டமானுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்க அதிக வாய்ப்பு!!

ஜீவன் தொண்டமானுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவை அடுத்து வரும் நாட்களில் பதவியேற்கவுள்ள நிலையில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுக்கள் வழங்க ஆராயப்பட்டு வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஜீவன் தொண்டமான் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், புதுமுக உறுப்பினராக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற இவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.