September 11, 2024

லெபனானில் வெடி விபத்து! 70 பேர் பலி! 3700 பேர் காயம்!

மத்தியகிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று செவ்வாய்கிழமை நடந்த பாரிய வெடி விபத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3700 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
வெடி விபத்தைத் தொடர்ந்த துறைமுகப்பகுதியில் பெரும் தீ மூட்டமும் கரும்புகைகளும் வெளிவந்திருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 2,700 தொன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக கிடங்கில்  சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அது வெடித்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.