September 16, 2024

தேர்தல் முடிவுகள் அறிவித்த உடன் பிரதமர் பதவியேற்பு.. முக்கிய செய்தி….

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றவுடன் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் வெற்றிபெற்றதும் முதலில் பிரதமர் பதவியேற்பார் என்றும் பின்னர், அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் தேசிய அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.