Mai 6, 2024

பூமியை போன்று 600 கோடி கிரகங்கள் இருக்கின்றன.. வெளியான புதிய தகவல்..!

நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ கூடிய ஒரு கிரகம் நாம் வாழுகின்ற பூமி. பூமியை போன்று அண்டவெளியில் வேறு கிரகங்களும் இருப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பூமி போல் வேறு கிரகம் இருக்க வேண்டுமெனில், அது, கடினமுடன், பூமி அளவு உருவத்துடன் மற்றும் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதுடன், தன்னுடைய நட்சத்திரத்தின் வாழ்விட மண்டலங்களுக்கு உள்ளேயே வட்ட பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் ஆகும்.

இதுபற்றி பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆய்வாளர் ஜேமி மேத்யூஸ் தெரிவித்தாவது, பால்வழி மண்டலத்தில் சூரியன் போன்ற நட்சத்திரங்களும், பூமி போன்ற கிரகங்களும் அமைந்திருக்க கூடும். ஒவ்வொரு 5 நட்சத்திரங்களுக்கு ஒரு பூமி என்ற கணக்கில் அவை இருக்கும்.

நம்முடைய பால்வழி மண்டலத்தில் 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் 7 சதவீதம் அளவுக்கு ஜி-வகையை சேர்ந்தவை என தெரிவித்து உள்ளார்.

வெகுதொலைவிலுள்ள நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் கிரகங்களை பற்றி கெப்ளர் தொலைநோக்கி கொண்டு ஆய்வு செய்ததில், பூமி போன்ற 600 கோடி கிரகங்கள் நமது பால்வழி மண்டலத்தில் இருக்கின்றன என அவர் கூறியுள்ளார்.