Mai 2, 2024

சீனாவிடம் இருந்து மேலும் ஒரு தொகை கடனை பெறும் இலங்கை! முக்கிய செய்தி…

சீனாவிடம் இருந்து மற்றும் ஒரு கடன் திட்டத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.

சீனாவின் அபிவிருததி வங்கியிடம் இருந்து 140 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.

இதில் இந்த மாதத்துக்குள் 70 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

மீதித்தொகை இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று சீனத தூதரகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலை சமாளிப்பதற்காகவே இந்தக்கடன் பெற்றுக்கொள்ளப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 13 ம் திகதியன்று சீன ஜனாதிபதி இலங்கையின் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடிதன் ஒருக்கட்டமாகவே இந்த கடன் திட்டம் அமைந்துள்ளது என்று இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.