Mai 2, 2024

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

கொரோனா விடயத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

கொரோனாவைப் பொருத்தவரையில் எந்த நாடு பாதுகாப்பானது என்ற ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

அந்த பட்டியலில் 752 மதிப்பெண்கள் பெற்று சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள ஜேர்மனிக்கு கிடைத்துள்ள மதிப்பெண்கள் 749. கொரோனா பாதுகாப்பின் அடிப்படையில் 200 நாடுகள் நான்கு மட்டங்களில் தரம்பிரிக்கப்பட்டன.

ஆசியா, ஐரோப்பா, ஓஷனியா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த 20 நாடுகள் முதல் மட்டத்தில் இடம்பிடித்தன.

ஸ்பெயின் மற்றும் இத்தாலியுடன், அமெரிக்காவும் பிரித்தானியாவும் மூன்றாம் மட்டத்தில்தான் இடம்பிடிக்க முடிந்தது.

அடிமட்டத்தில், கொரோனா தொற்றுக்கு மிக மோசமான நாடு என்ற பெயரைப் பெற்றது தென் சூடான் நாடு.

ஒரு நாடு கொரோனாவை தடுத்து நிறுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது, அந்த நாட்டின் மருத்துவ அமைப்பின் தரம் ஆகியவை தரம்பார்க்க பயன்படுத்தப்பட்ட முக்கிய தரநிலைகளாக கருத்தில்கொள்ளப்பட்டன.

அத்துடன் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எவ்வளவு விரைவில் ஒரு நாடு மீள்கிறது என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது.

சுவிட்சர்லாந்தும் ஜேர்மனியும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீண்டதாலும், மக்களில் நலனையும் பாதுகாப்பையும் பலிகடாவாக்காமல், கவனமாக ஊரடங்கை நெகிழ்த்தியதாலும்தான் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தன என்கிறார்கள் ஆய்வை மேற்கொண்டவர்கள்.

கொரோனா விடயத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடத்தைப் பிடித்த நாடுகள்:

சுவிட்சர்லாந்து

ஜேர்மனி

இஸ்ரேல்

சிங்கப்பூர்

ஜப்பான்

ஆஸ்திரியா

சீனா

அவுஸ்திரேலியா

நியூசிலாந்து

தென்கொரியா