März 28, 2025

ஏசல பெரஹர: 45 கலைஞர்களுக்கு கொரோனா

அஸ்கிரிய ,மல்வத்தை பீடங்களை மகிழ்விக்க கண்டி  எசல பெரஹரவிற்கு அரசு அனுமதியளித்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்திற்கு வந்த 45 கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கண்டி எசல பெரஹராவிற்காக கதிர்காம ஆலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நடனக் குழுவில் பங்கேற்ற 76 கலைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது 45 கலைஞர்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை சுகாதார மருத்துவத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.