März 28, 2025

இலங்கை:அரச ஊழியர் சம்பளம் வெட்டு?

கொரோனா தாக்கத்தின் தீவிரத்தால் நாடு மீண்டும் மீண்டும் முடக்கப்பட்டால் அரச துறையினரின் மாதாந்த சம்பளத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே ஆளும் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடாகுமென இலங்கையின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது சம்பளத்தை வழங்குவதாக காண்பித்துவருகின்ற நிலையில் தற்போதைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த மாதங்களில் சம்பள வெட்டு அமுல்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.