März 28, 2025

இலங்கையில் அதிபர்,ஆசிரியர்கள் 15 பேர் மரணம்!

கொரோனா தடுப்பூசியை காரணங்காட்டி தொழிற்சங்கங்களை முடக்க  இலங்கை அரசு முற்பட்டுவருகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொள்ளாமல் அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக போராட்டம் நடத்திய 15 ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் மூன்று அதிபர்களும், மற்றவர்கள் ஆசிரியர்கள் என தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன என்பவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 98 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்ப்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி  உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.