Mai 3, 2024

இராஜாங்க அமைச்சர் றொகான் ரத்வத்த பண்ணையாளர்களை சந்தித்தார்.

2024/03/22 இன்று வெலிக்கந்தை மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் றொகான் ரத்வத்த அவர்கள் மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு பயணம் செய்து நிலமைகளை ஆராய்ந்த பின் வெலிக்கந்தை மகாவலி அலுவலகத்தில் மாலை 3.00 பண்ணையாளர்களை சந்தித்தார் அந்தவகையில் பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைகளை ேகட்டறிந்ததுடன் நீங்கள் எதிர்பார்பது என்ன 1. அத்து மீறி குடியேறியவர்களை வெளியேற்றி நீதிமன்ற தீர்ப்புக்களை அமுல் படுத்தல் 2.2011 ஆண்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கிய காணியினை வார்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும் 3. அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டவர்களால் அழிக்கப்பட்ட குளங்கள் புனரமைப்பு செய்தல் 4.அத்துமீறிய பயிர் செய்கையாளர்களால் கொல்லப்பட்ட மற்றும் காயப்படுத்தி.காணாமல் ஆக்கப்பட்ட கால்நடைகளுக்கான இழப்பீட்டை வழங்குதல் 5. கால்நடைகளுக்கான காப்புறுதி திட்டத்தை செயற்படுத்தல் 6.கால்நடைகளுக்கான வைத்திய நிலையம் அமைத்தல் 7. மயிலத்தமடு மாதனை போன்ற பகுதிக்கு செல்லும் போக்குவரத்து பாதைகள் புனரமைப்பு இரு வாரங்களுக்குள் அப்பகுதியில் அத்து மீறிய செயற்பாட்டில் ஈடுபடும் அனைவரையும் வெளி யேற்றுவதாகவம் 2.ஏப்பரல் 15 முன் அடயாளப்படுத்தப்படும் குளங்கள் பார்வையிட்டு மகாவலியே புனரமைப்பு செய்வதற்கான பணியை மேற்கொள்வதாகவும் அதன்பின் மீண்டும் பண்ணையாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார் இவ்வேழூ கோரிக்கைகளும் நிறைவேறும் பட்சத்தில் எங்களது அறவளி போராட்டம் முடிவுறுத்தும் நலையினை பரீசீலிப்போம் என்பதையும் உறுதியாகவும் அறுதியாகவும் தெரிவித்தோம் தான் சொன்னதை செய்பவன் என்ற வகையில் ஏப்ரல் 15 முன் இருவேலைகளை செய்வதற்கு மகாவலி பொறுப்பாளருக்கு அறிவுறுத்துகின்றேன் என தெரிவித்தார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert