Mai 2, 2024

யேர்மனியில் 2 இலட்சம் மக்கள் திரண்டு போராட்டம்!!

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், தீவிர வலதுசாரிகள் மற்றும் அதன் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 200,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். 

இன்று சனிக்கிழமை மதியம் 150,000க்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக பேர்லின் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் 200,000 பேர் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. 

யேர்மன் பாராளுமன்றக் கட்டிடத்தின் முன் அமைந்துள்ள  ரீச்ஸ்டாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் AfD கட்சிக்கு எதிரான பதாதைகளையும் தாங்கியபடி கோசங்களை எழுப்பினர். 

இப்போராட்டம் Mainz, Dresden மற்றும் Hanover நகரங்களைத் தொடர்நது பெர்லினிலும் நடந்து முடிந்தது.

„நாங்கள் ஃபயர்வால்“ என்ற முழக்கத்தின் கீழ் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்திற்கு ஆதரவைக் காட்டவும் கூடினர்.

நவ-நாஜிக்கள், வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளான AfD மற்றும் CDU உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு இரகசியக் கூட்டத்தில் கரெக்டிவ் என்ற புலனாய்வு வலைப்பின்னலின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து எதிர்ப்பு அலைகள் தோன்றின. 

இந்த போராட்டங்கள் ஜனநாயகம் மற்றும் நமது அரசியல் சாசனத்திற்கு ஆதரவான வலுவான அடையாளம் என்று ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் எக்ஸ் தளத்தில்  எழுதினார்.

ஜேர்மனியில் தீவிர வலது சாரி கட்சிக்கு மக்களிடையே மிகவும் ஆதரவு வலுத்து வருகின்றது. இது ஏனைய கட்சிகளிடையே கவலைகளை ஏற்படுத்தியள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert