Mai 2, 2024

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வு
தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கட்கு சுடர் ஏற்றி மலர் தூவி வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு,

மங்கல விளக்கேற்றலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வில் விடுதலை நடனம், விடுதலைப் பாடல், விடுதலை பாடலை இசைக்கருவியில் மீட்டுதல் என்ற வகையில் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் பங்குபற்றிய கலைஞர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை அரங்கில் நிரூபித்தனர். விடுதலைக்காந்தள் போட்டி நிகழ்வில் பாலர்பிரிவு கீழ்ப்பிரிவு மத்தியபிரிவு ஆகிய பிரிவுகளில் பங்குபற்றிய போட்டியாளர்களில் முதல்மூன்று இடங்களைப்பெற்ற போட்டியாளருக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

மேற்பிரிவு மற்றும் அதிமேற்பிரிவில் பங்குபற்றி முதலாம் இடத்தைப்பெற்ற போட்டியாளர்களுக்கு அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் எனும் விருதும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. விடுதலைக் காந்தள் நிகழ்வானது மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பாடற்போட்டி பாலர்பிரிவில்

முதலாம் இடம் : அனாசோபியா ராஜேந்திரன்
இரண்டாம் இடம் : ஶ்ரீவத்சனி அருள்ராஜ் சர்மா
மூன்றாம் இடம் : கிசாறா சுகந்தன்

பாடற்போட்டி கீழ்பிரிவில்

முதலாம் இடம் : அக்ஷ்ய சசிதரன்
இரண்டாம் இடம் : மகீரா மாயா ஆனந்தராஜா
மூன்றாம் இடம் : அஸ்லி கமல்ஸ்ரன்

பாடற்போட்டி மத்தியபிரிவில்

முதலாம் இடம் : லறிஷா எமிலியானுஸ்
இரண்டாம் இடம் : ஸ்டெஃபான் ஆயுடிக் வசந்தராஜ்
மூன்றாம் இடம் : யுஹென கீதன்
மூன்றாம் இடம் : சுவாஸ்திகா ஈஸ்வரன்

பாடற்போட்டி மேற்பிரிவில்

இரண்டாம் இடம் : டிவைனா அன்ரன் ஜோர்ஜ்
மூன்றாம் இடம் : அபிநயா நாவேந்தன்
மூன்றாம் இடம் : மதுஷா ரஞ்சித்

தனிநடனப்போட்டி மேற்பிரிவில்

இரண்டாம் இடம் : திபிஷா ராம்குமார்
மூன்றாம் இடம் : மதுசா சுரேஸ்

தனிநடனப்போட்டி அதிமேற்பிரிவில்

இரண்டாம் இடம் : ஐலின் றிமோன்சன்

இசைக்கருவி அதிமேற்ப்பிரிவில்

செல்வன் எமில்ராஜ் எமிலியானுஸ் அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தனிநடனம் அதிமேற்பிரிவில்

செல்வி சுஜானி குமரேஸ் அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

அதிமேற்பிரிவில் பாடற்போட்டியில்

செல்வன் அருண் பரமதாஸ் அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

இசைக்கருவி மேற்ப்பிரிவில்

செல்வி பிரீத்திகா சஜீவன் அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தனிப்பாடல் மேற்பிரிவில்

செல்வன் தீபக் தமிழ்மாறன் அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் விருதைப் பெற்றுக்கொண்டார் .

தனிநடனம் மேற்பிரிவில்

செல்வி மதுசா ரஞ்சித் அதி உயர் விருதான விடுதலைக்காந்தள் விருதைப் பெற்றுக்கொண்டார் .

குழு நடனப்போட்டிகளில்

1.முதலாம் இடம்

ஆசிரியர் திரு நிமலன் சத்தியகுமார் அவர்களின் மாணவர்களான

விதுசா சண்முகநாதன்
ஆராதனா கிருஷ்ணமேனன்
ஆதிஹா செல்வராஜா
அஸ்வதி ஆல்ரின்
செலின் வசந்தன்
தர்மிகா மோகனதாஸ்
ஜனிஷா ரியா தனபரன்

2.இரண்டாம் இடம்

ஆசிரியர் திருமதி கார்த்திகா சுரேஸ் அவர்களின் மாணவர்களான

அஸ்லி கமல்ஸ்ரன்
நவீனா பாலமோகன்
ஆசினியா சுதாகரன்
சனா கபிலன்

  1. மூன்றாம் இடம்

ஆசிரியர் திருமதி சஞ்சிகா ராம்ராஜ் அவர்களின் மாணவர்களான

அன்புயா சுரேன்
அபீனா சிவானந்தன்
அனுஷ்கா ரஜனிகாந்

இதனைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனும் எம் தாரக மந்திரத்துடன் இவ் நிகழ்வு நிறைவடைந்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert