Mai 9, 2024

காசு கொடுத்து பிரான் ஈழத்தழிழர்கள் இளையராஜாவிடம் பிழைக்க வந்தவர்கள்“ என்ற பட்டம்பெற்றார்கள்

வணக்கம் உறவுகளே!!
எண்பது வயது இசை
அமைப்பாளர்
பாரீஸ் வந்து காந்தி சிலை
அருகில் நின்று „நீங்கள் இங்கு பிழைக்க வந்தவர்கள்“ என்ற சிறந்த பொன் மொழியைக் கூறி விட்டு சென்றுள்ளார். அவரிட மிருந்து
இப்படியான வார்த்தை வரும் என்ற என்போன்று யாரும் எதிர் பார்க்கவில்லை. காசு கொடுத்துச் சூனியம் வையத்துக் கொள்வது என்பது இதுதான்.
இசைவிழா ஏற்பாட்டாளர் நட்புடன் கேட்டதற்கு இணங்க மறைந்த எஸ். பீ. பாலசுப்ரமணியம்இ விவேக் இருவரின் நினைவாக மரம் நடுவதற்கு இளையராஜா விரும்புகிறார். அதிலும் உங்கள் நகரில் உள்ள காந்தி சிலை அருகில் இரு மரக்கன்றுகள் நடுவதற்கு உதவுங்கள் என்றார்.
எனது மனம் மகிழ்வுடன் „சம்மதம்“
என்றது. ஆனால்இ ஏற்பாட்டாளர் ஒருவித செலவும் இல்லாமல் தான் புகழ்பெற இப்படி நாடகம் செய்வார் என்று எண்ணவில்லை.
நகர மன்ற உறுப்பினராக உள்ள காரணத்தால்இ இரண்டு மாதங்கள் முயற்சி செய்துஇ „அரசு விழா“எனும்
சிறப்பு முறையில் ஏற்பாடு செய்து இவர்கள் குறிப்பிட்ட 10.00 காலை 03.07.23 என்று அனைத்து ஒழுங்கும் நடந்தது. இசை அமைப்பாளர் கூறிய பிழைக்க வந்தவர்கள்இ நகரமன்ற அதிகாரிகள்இ துணை மேயர்கள்
சரியான நேரத்திற்கு வந்து விட்டோம்.
ஆனால் இலவசமாய்இ புகழ் சேர்த்துக்கொள்ளும் நபர்கள் 11.45க்கு
வந்தார்கள்இ நின்றார்கள்இ ( முதல் மரம் நேரத்தோடு நட்டுவிட்டோம்)இ மரம் நட்டார்கள்.. காரில் ஏறிப் பயணப் பட முயற்சித்த பின் வந்தார்… பிழைக்க வந்தவர்கள் என்ற புகழ் மிகு வார்த்தை குறிவிட்டுப் பயணம் ஆனார்கள்.
பிழைக்க வந்தவர்கள் நேரத்தை மதித்து வந்தவர்கள். இசை மேதையோ தனது வருகையின் தாமதம் குறித்தோஇ மரம் எதற்காக நாடுகிறோம் என்றோ ஒரு வார்த்தை இல்லை. இதுவரையில் எதற்காக விழா நடந்தது என்று பலருக்கும் தெரியாது. புகழ் தேடியவர்களும்இ கூறவில்லை. நடந்து முடிந்த குறைகளுக்கு மனிப்பு கோருகிறேன்.
பிழைக்க வந்த… ஆனால் பிழைக்கத் தெரியாத. …..அலன் ஆனந்தன்..5 வது
முறையாக உள்ள நகர மன்ற உறுப்பினர். பிரான்ஸ்.


Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert