Mai 11, 2024

உக்ரைனில் சண்டையிடும் ரஷ்யப் படைகளை பார்வையிட்டார் புடின்


உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவத் தலைமையகத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நோில் சென்று பார்வையிட்டார்.

இன்று செவ்வாய்கிழமை அதிகாலை புடின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய படைகளின் தலைமையகத்திற்கு வருகை தருவதைக் காட்டும் காணொளியை ரஷ்யா வெளியிட்டது.

படையெடுப்பில் ஒரு சக்திவாய்ந்த புதிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் வான்வழிப் படைகளுக்குப் பொறுப்பான ஒரு ஜெனரலுடன் போரைப் பற்றி விவாதித்தார்.

புடின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் இராணுவக் கட்டளைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அங்குள்ள நிலைமை பற்றிய அறிக்கைகளைக் கேட்டறிந்தார் என்று கிரெம்ளின் செவ்வாயன்று கூறியது. உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள தலைமையகத்தையும் அவர் பார்வையிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert